குஜராத்: தாயாரை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர் மோடி


குஜராத்: தாயாரை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர் மோடி
x
தினத்தந்தி 11 March 2022 11:05 PM IST (Updated: 11 March 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்.

காந்திநகர்,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. 

இதற்கிடையில், 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் பாஜக தற்போதே இறங்கிவிட்டது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான மோடி இன்று குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அவர் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யபப்ட்டிருந்த பேரணியில் பங்கேற்று வரும் சட்டசபை தேர்தலுக்கான பிரசார பணிகளை தற்போதே தொடங்கிவிட்டார்.

இதனை தொடர்ந்து, காந்தி நகரில் உள்ள தனது தாயார் ஹிராமென் மோடியின் வீட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு தனது தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி பின்னர் அங்கு இரவு உணவு அருந்தினார். தனது தாயார் வீட்டிலேயே பிரதமர் மோடி இன்று இரவு தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story