பிரதமர் மோடியுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு;
அண்மையில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது
புதுடெல்லி,
அண்மையில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக மட்டும் 255 இடங்களில் வென்றது. அபார வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. யோகி ஆதித்யாத் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். மாநில அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அம்மாநில பாஜகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தனது டெல்லி பயணத்தின் போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்த யோகி ஆதித்யாத் பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது மந்திரி சபை குறித்தும் பதவியேற்பு விழா எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை செய்து இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
உத்தர பிரதேச துணை முதல் மந்திரியான கேஷவ் பிரசாத் மயுரியா, சமாஜ்வாடி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதோடு, மந்திரிகளாக இருந்த 10 பேர் தோல்வியை சந்தித்துள்ளனர். இதனால், மந்திரி சபையில் புதுமுகங்கள் பலரும் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story