இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 1 May 2022 10:50 PM IST (Updated: 1 May 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

வெயிலின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தனது கடிதத்தில் கூறி உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது கோடைக்காலம் நிலவி வரும் சூழலில், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதி உள்ள அந்த கடிதத்தில், மே மாதத்தில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும் என்றும், வெயிலின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
 
மேலும், ‘மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தினமும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்பநிலை தொடர்பான தகவல்களை பதிவு செய்கிறது. அதற்கு ஏற்ப மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

வெயில் பாதிப்புகளால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு போதிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’ என்றும் சுகாதாரத் துறை செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story