கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி:நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ


கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி:நெஞ்சை பதைபதைக்க  வைக்கும் வீடியோ
x

ஆந்திரா அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விஜயவாடா,

ஆந்திரமாநிலம் தேவாரப்பள்ளி நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 19 மாத குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து விபத்து நிகழ்ந்தது.

டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார், சாலையின் எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story