தார்வாரில், பெண் விவகாரத்தில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் இருவர் கைது


தார்வாரில், பெண் விவகாரத்தில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் இருவர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தார்வாரில், பெண் விவகாரத்தில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

உப்பள்ளி:

தார்வார்(மாவட்டம்) டவுனில் எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த அலுவலகம் அருகே கிரண், ஆசிப், சான்வாஜ் ஆகிய 3 பேரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த 3 பேரும் தார்வார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெண் விவகாரம் தொடர்பாக இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த அன்றே 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த வழக்கில் தொடர்புடைய தார்வார் தாலுகா அம்மனிபாவி கிராமத்தைச் சேர்ந்த ஷாகில்(வயது 24), தார்வார் டவுன் கொல்லூர் காலனி பகுதியில் வசித்து வரும் தீபக்(22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story