சத்தீஸ்கரில் பஸ் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உட்பட 40 பேர் காயம்
சத்தீஸ்கரில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 40 பேர் காயமடைந்தனர்.
மோஹ்லா,
அம்பகர் சௌகி மேம்பாட்டுத் தொகுதியில் உள்ள விசார்பூர் கிராமத்தில் வசிக்கும் மஹர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொண்டி லோஹாரா பகுதியில் உள்ள கிராமத்திற்குப் பஸ் ஒன்றில் சென்றனர். அப்போது பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அம்பகர் சௌகியில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக தொகுதி மருத்துவ அதிகாரி டாக்டர் துர்வே கூறும்போது, "தற்போது 13 குழந்தைகள் மற்றும் 27 பெண்கள் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த மூன்று பெண்கள் ராஜ்நந்த்கான் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.
Related Tags :
Next Story