கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கிவிட்டதா?


கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கிவிட்டதா?
x

கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கிவிட்டதா? என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளித்துள்ளார்.

பெங்களூரு

கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கிவிட்டதா? என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளித்துள்ளார்.

பயப்பட தேவை இல்லை

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து நிபுணர் குழு மற்றும் அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆனால் நோய் தீவிரத்தன்மை வாய்ந்ததாக இல்லை. இறப்புகள் நிகழவில்லை. தற்போது நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது. பொதுமக்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. தகுதியான அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பு கட்டுப்பாடுகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த பெற்றோர் உரிய கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அவ்வாறு கட்டுப்பாடுகளை பின்பற்றினால் நோய் பரவலை கட்டுக்குள் வைக்க முடியும். பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். அதனால் பெங்களூருவில் பாதிப்பு அதிகமாகியுள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக குறைவு. தற்போதைய கொரோனா பரவலை 4-வது அலை என்று கூற முடியாது. கொரோனாவுடன் டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தப்படும். பெங்களூரு மருத்துவ கல்லூரியில் மரபணு பரிசோதனை கூடத்தை உடனே தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் நம்ம கிளினிக்குகளை தொடங்க விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story