திருப்பதியில் நேற்று 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்; ரூ 4.18 கோடி உண்டியல் வசூல்


திருப்பதியில் நேற்று 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்; ரூ 4.18 கோடி உண்டியல் வசூல்
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மட்டும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட தூரத்திற்கு காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் திக்கு முக்காடினர்.

இந்த நிலையில் இந்த வாரம் திங்கட்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் கணிசமான அளவில் குறைந்து காணப்பட்டது. நேற்று வழக்கத்திற்கு அதிகமாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கின்றனர்.

தற்போது கோடைகாலம் என்பதால் திருப்பதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 103 டிகிரி வெயில் கொளுத்தியது பக்தர்கள் நடை பாதையில் செல்ல சிரமம் அடைந்தனர். இதனை அறிந்த ஜவாஸ் என அதிகாரிகள் பக்தர்கள் சிரமமின்றி தரிசனத்திற்கு வருவதற்காக நடைபாதையில் பச்சை நிற கம்பளம் விரித்து உள்ளனர்.

இதேபோல் தரிசனத்திற்காக நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் கோயிலில் காத்திருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதி அடைந்து வருகின்றனர்

திருப்பதியில் நேற்று 90,165 பேர் தரிசனம் செய்தனர்.43,362 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ. 4.18 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது


Next Story