பிரதமர் மோடி வரும் 3-ந்தேதி 108-வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரை


பிரதமர் மோடி வரும் 3-ந்தேதி 108-வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரை
x

பிரதமர் மோடி வருகிற 3-ந்தேதி 108-வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார்.



புதுடெல்லி,


பிரதமர் மோடி வருகிற 3-ந்தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வழியே 108-வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

இந்திய அறிவியல் மாநாட்டின் இந்த ஆண்டிற்கான மைய பொருளாக, மகளிருக்கு அதிகாரமளித்தலுடன் கூடிய நீடித்த வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் என்பது இருக்கும்.

இந்த மாநாட்டில் நீடித்த வளர்ச்சி, மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவற்றை அடைவதற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு ஆகிய விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்படும்.

இதில் பங்கு பெறுவோர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிகள் பற்றி விவாதிப்பார்கள்.

பெண்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட கல்விகளில், ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் பொருளாதாரத்தில் பங்கேற்றல் ஆகியவற்றை சம அளவில் கிடைக்க செய்வதற்கான வழிகளை கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் மகளிரின் பங்கு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்படும். அதில், பிரபல பெண் விஞ்ஞானிகள் சொற்பொழிவு ஆற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story