363 டிரோன்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர்


363 டிரோன்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர்
x

கோப்புப்படம்

363 டிரோன்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர் கோரியுள்ளது.

புதுடெல்லி,

எல்லை பகுதிகளிலும், உயர்ந்த மலைப்பகுதிகளிலும் பொருட்களை கொண்டு செல்வதற்கு டிரோன்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

அதற்காக 363 டிரோன்களை கொள்முதல் செய்ய ராணுவம் நேற்று டெண்டர் கோரியது. 163 டிரோன்கள், அதிக உயரம் கொண்ட பகுதிகளிலும், 200 டிரோன்கள் நடுத்தர உயரம் கொண்ட பகுதிகளிலும் பயன்படுத்தப்படும்.

இந்த டிரோன்கள் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று ராணுவம் கூறியுள்ளது.

மேலும், நடுத்தர உயர பகுதிகளுக்கான டிரோன்கள், தலா 20 கிலோ எடையுள்ள பொருட்களையும், அதிக உயர பகுதிகளுக்கான டிரோன்கள் 15 கிலோ எடையுள்ள பொருட்களையும் சுமந்து செல்லக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 10 கி.மீ. தூரம் வரை பொருட்களை கொண்டு செல்ல வேண்டும், டிரோனில் உள்நாட்டு உதிரிபாகங்கள் 60 சதவீதம் வரை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றும் ராணுவம் கூறியுள்ளது.

டெண்டர் சமர்ப்பிக்க நவம்பர் 11-ந் தேதி கடைசிநாள் ஆகும்.


Next Story