அசாமில் படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு - 3 பேர் காயம்
அசாமில் நேற்று மாலை படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
நல்பாரி (அசாம்),
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் நேற்று மாலை படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
நேற்று மாலை 5 மணியளவில் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கோரோமரி பகுதியில் இருந்து நல்பாரி மாவட்டத்தில் உள்ள குரிஹாமரி பகுதிக்கு 12 பேரை ஏற்றிச் சென்ற நாட்டுப் படகு, எதிர்திசையில் இருந்து வந்த மற்றொரு படகின் மீது மோதியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் படகில் இருந்த பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் ஐஜுல் ஹோக் என அடையாளம் காணப்பட்டார். மேலும் மொகிபுல் இஸ்லாம், தைசுதீன் அகமது மற்றும் பர்மான் அலி ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் முகல்முவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story