கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் செயல் தலைவராக சந்திரப்பா நியமனம்
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் செயல் தலைவராக சந்திரப்பா நியமனம் செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
224 இடங்களைக் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது
அங்கு மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவகுமார் உள்ளார். செயல் தலைவராக இருந்து வந்த ஆர். துருவநாராயணா கடந்த மாதம் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய செயல் தலைவராக பி.என். சந்திரப்பாவை (வயது 67) கட்சித்தலைவர் கார்கே நேற்று நியமனம் செய்தார். இவர் முன்னாள் எம்.பி. ஆவார்.
அங்கு சட்டசபை தேர்தலில் 166 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
எஞ்சிய 58 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி உள்ளது.
Related Tags :
Next Story