குஜராத் கடல் பகுதியில் 2 பாகிஸ்தான் மீனவர்கள் கைது


குஜராத் கடல் பகுதியில் 2 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
x

கோப்புப்படம்

குஜராத் கடல் பகுதியில் 2 பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டி ஹரமி நல்லா கடற்கழி பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை, இந்திய விமானப்படையினர் ஆளில்லா விமானம் மூலம் வழக்கம்போல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் மீனவர்களுடன் 6 படகுகள் எல்லை தாண்டி வருவதை கண்டுபிடித்து, எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பாகிஸ்தான் மீனவர்களை கண்டுபிடித்து கைது செய்தனர். தொடர்ந்து தேடுதல் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 900 சதுர கிலோமீட்டர் தூரத்துக்கு பரந்து விரிந்திருக்கும் ஹரமி நல்லா கடற்கழி பகுதிக்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய மீனவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இங்கு அதிக மீன் பிடிக்க முடியும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் மீனவர்கள் அவ்வப்போதுஅத்துமீறி நுழைவது நடக்கிறது.


Next Story