2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் கடவுள் ராமருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது: யோகி ஆதித்யநாத்


2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் கடவுள் ராமருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது:  யோகி ஆதித்யநாத்
x

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை விட (ரூ.6.9 லட்சம் கோடி), இந்த பட்ஜெட்டிற்கான திட்ட செலவு ரூ.7.36 லட்சம் கோடியாக அதிகரித்து காணப்படுகிறது.

லக்னோ,

உத்தர பிரதேச சட்டசபையில், 2024-25-ம் ஆண்டுக்கான வருடாந்திர பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி மந்திரி சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்து பேசினார்.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை விட (ரூ.6.9 லட்சம் கோடி), இந்த பட்ஜெட்டிற்கான திட்ட செலவு ரூ.7.36 லட்சம் கோடியாக அதிகரித்து காணப்படுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், என்னுடைய அரசின் எட்டாவது பட்ஜெட் இதுவாகும் என கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டானது, கடவுள் ராமருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதனால், மக்கள் நலன் உறுதி செய்யப்படும் என்று கூறினார்.

பட்ஜெட்டின் தொடக்கத்தில், மத்தியில் மற்றும் நிறைவில் என ஒவ்வொரு வார்த்தையிலும் கடவுள் ஸ்ரீராமர் உள்ளார். என்னுடைய எண்ணங்கள் மற்றும் தீர்மானங்களில் ஸ்ரீராமர் உள்ளார். ஏனெனில், ஸ்ரீராமர் என்றால் மக்கள் நலன் என்று பொருள் என்று கூறியுள்ளார்.


Next Story