அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நாளை ஆலோசனை


அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நாளை ஆலோசனை
x

அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் நாளை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதனிடையே கொரோவை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போதுவரை 1,91,79,96,905 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மாநில வாரியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மதிப்பாய்வு செய்ய உள்ளார். மேலும், மார்ச் 16ம் தேதி முதல் 12-14 வயதுடையோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில், இதுவரை 3.22 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தடுப்பூசி வேகத்தை அதிகரிப்பது மற்றும் இளம் பருவத்தினர் அனைவருக்கும் 100% தடுப்பூசி எனும் நிலையை எட்டுவது தொடர்பாக கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story