ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து: கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு


ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து: கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
x

ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எடத்த நாட்டுக்கரா பகுதியில் கடந்த 22-ந் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நிலம்பூர் எம்.எல்.ஏ. அன்வர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) பேசும் போது, காந்தி பெயரை தனது பெயருடன் இணைத்து உச்சரிக்க கூட தகுதி இல்லாதவராக ராகுல் காந்தி மாறிவிட்டார். இவர் நேரு குடும்பத்தில் தான் பிறந்தவரா என்பதில் சந்தேகம் எழுகிறது. ராகுல் காந்திக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டும் என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து வக்கீல் பைஜூ நோயல் என்பவர் மன்னார்காடு கோர்ட்டில் ராகுல் காந்தி குறித்து அவதூறாக பேசிய அன்வர் எம்.எல்.ஏ. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அன்வர் எம்.எல்.ஏ. மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு நாட்டுக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, அன்வர் எம்.எல்.ஏ. மீது நாட்டுக்கல் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story