தீப்தி சர்மாவின் மன்கட் முறையை சுட்டி காட்டி டெல்லி போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை


தீப்தி சர்மாவின் மன்கட் முறையை சுட்டி காட்டி டெல்லி போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
x

இங்கிலாந்து வீராங்கனையை மன்கட் முறையில் தீப்தி சர்மா அவுட் செய்த நிகழ்வை டுவிட்டரில் பகிர்ந்து டெல்லி போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.



புதுடெல்லி,


இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தின் 43-வது ஓவரில், இங்கிலாந்து வீராங்கனை சார்லீ டீன், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவால் பேட்டிங் திசையின் எதிர் முனையில் ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஐ.சி.சி.யின் புதிய கிரிக்கெட் விதிகளின்படி, மன்கட் முறையில் அவுட் செய்வது தற்போது ரன் அவுட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லி போக்குவரத்து போலீசார் தீப்தி சர்மா, எதிரணி வீராங்கனையை மன்கட் முறையில் அவுட் செய்த நிகழ்வை குறிப்பிட்டு, வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.

அந்த பதிவில், வாகனம் ஓட்டும்போது ஏன் விழிப்புணர்வு முக்கியம் என்றால்... என குறிப்பிட்டு சாலை பாதுகாப்பு, மன்கட், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய ஹேஷ் டேக்குகளையும் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரரான வினூ மன்கட் என்பவர் 1947-48-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, அந்நாட்டு வீரர் பில் பிரவுன் என்பவரை (எதிர்முனையில் இருந்தபோது) இந்த முறையில் ஆட்டமிழக்க செய்ததன் தொடர்ச்சியாக, வீரர்களை இதுபோன்று ஆட்டமிழக்க செய்யும் முறைக்கு மன்காடிங் என பெயர் வந்தது.




Next Story