டெல்லியில் அடுத்த 2 வாரங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க கூடும்; மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை


டெல்லியில் அடுத்த 2 வாரங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க கூடும்; மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை
x

டெல்லியில் அடுத்த 2 வாரங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என மூத்த மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.



புதுடெல்லி,



டெல்லியில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகர் சுரன்ஜித் சாட்டர்ஜி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, டெல்லியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால், டெல்லியில் அடுத்த 2 வாரங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதுவரை தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படவில்லை. அதனால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவர்களை கவனிக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

இதுபோன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்து கொள்வது என்பது அதிக உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, உடல் முழுவதும் மூடும்படியான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். உங்களது வீட்டை சுற்றி நீர் சூழ்ந்து காணப்படுவதோ அல்லது தேங்கிய நீரோ இல்லாமல் உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


Next Story