டெல்லியில் திடீரென அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு !


டெல்லியில் திடீரென அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு !
x

தலைநகர் டெல்லியில் கடண்டத சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் டெங்,கு பாதிப்பு திடீரென அதிகரித்து உள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் 693 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் திடீரென அதிகரித்து 1238 பேருக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்ப்ட்டு உள்ளது.

மேலும், நகரில் இந்த ஆண்டு 200 பேர் மலேரியா மற்றும் 40 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.


Next Story