மராட்டியத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு


மராட்டியத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
x

மராட்டியம் கோலாப்பூர் பகுதியில் 112 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கோலாப்பூர்,

இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் கோலாப்பூர் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் பகுதியில் இருந்து 112 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story