கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவி தற்கொலை முயற்சி; கணவரிடம் போலீசார் விசாரணை


கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவி தற்கொலை முயற்சி; கணவரிடம் போலீசார் விசாரணை
x

தீர்த்தஹள்ளி அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவி தற்கொலைக்கு முயன்றார்.இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவமொக்கா;

குடும்பத்தகராறு

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா திரியம்பகபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா. இவர், திரியம்பகபுரா கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவி ஆவார். இவரது கணவர் ராமசந்திரா. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமசந்திரா தோப்பில் உள்ள சில மரங்களை வெட்டி அதனை ரூ.1 லட்சத்திற்கு விற்றுள்ளார்.இந்த பணத்தை மனைவி பிரேமா கேட்டுள்ளார். ஆனால் ராமசந்திரா பணத்தை கொடுக்கவில்லை. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமசந்திரா மனைவியை கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது.


விஷம் குடித்தார்

இதனால் பிரேமா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பிரேமா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், பிரேமாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மணிப்பால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவரிடம் விசாரணை

இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் குடும்பத்தகராறில் பிரேமா தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேமாவின் கணவர் ராமசந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story