மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன் - பிரதமர் மோடி தமிழில் டுவீட்
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் வீரமும் உறுதியும் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இந்தநிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story