அமித்ஷா தலைமையில் இன்று மத்திய மண்டல கவுன்சில் கூட்டம்: 4 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்பு


அமித்ஷா தலைமையில் இன்று மத்திய மண்டல கவுன்சில் கூட்டம்: 4 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்பு
x

கோப்புப்படம்

மத்திய பிரதேசத்தில், இன்று மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்கள் இணைந்த மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடக்கிறது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மேற்படி 4 மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மந்திரிகள், தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பு, மின்சாரம், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பொது நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

மண்டல கவுன்சில் கூட்டத்துக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story