7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 54 சதவீதம் உயர்வு - ஆய்வில் தகவல்


7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 54 சதவீதம் உயர்வு - ஆய்வில் தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 18 Feb 2023 3:20 PM GMT (Updated: 18 Feb 2023 3:22 PM GMT)

கடந்த ஆண்டில் சென்னை உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 54 சதவீதம் அதிகரித்துள்ளதாக அனராக் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

புதுடெல்லி,

கடந்த ஆண்டில் சென்னை உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 54 சதவீதம் அதிகரித்துள்ளதாக அனராக் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையான வீடுகளின் மொத்த எண்ணிக்கை 2021-ல் 2,36,500 ஆக இருந்த நிலையில் 2022-ல் 3,64,900 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு இந்த ஏழு நகரங்களில் அதிகபட்சமாக 2014-ல் 3.43 லட்சம் வீடுகள் விற்பனை ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் வீடுகள் விற்பனை 1,09,700 ஆக 2021-ஐ இட 44 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லியில் வீடுகள் விற்பனை 63,800 ஆக 59 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்களூருவில் 49,478 ஆக 50 சதவீதமும் ஐதராபாத்தில் 47,487 ஆக 87 சதவீதமும் அதிகரித்துள்ளது.

சென்னையில் 2021-ல் 12,525 ஆக இருந்த வீடுகள் விற்பனை 2022-ல் 16,097 ஆக 29 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-ல் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விலை சராசரியாக ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது.


Next Story