சிகாரிப்புராவில் இளம்பெண் பலாத்காரம்; வாலிபர் கைது
சிகாரிப்புராவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
சிவமொக்கா
தனியார் நிறுவனம்
சிவமொக்கா மாவட்டம் சிகாாிப்புரா தாலுகா சிராளகொப்பா பகுதியை சேர்ந்தவர் அஜ்மத் உல்லா (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் சிரளாகொப்பா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் அஜ்மத்தும் நண்பர்களாக பழகி வந்தனர். அது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி அஜ்மத் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பல இடங்களுக்கு இளம்பெண்ணை, வாலிபர் அழைத்து சென்றுள்ளார். மேலும் இளம்பெண் வீட்டில் தனிமையில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
கொலை மிரட்டல்
மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் இளம்பெண்ணை, அஜ்மத் மிரட்டி உள்ளார். இதனால் இதுபற்றி இளம்பெண் வெளியே யாரிடமும் கூறவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர், சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அப்போது இளம்பெண் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி இளம்பெண்ணிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அஜ்மத் தான் தன்னை கர்ப்பமாக்கினார் என கூறி அழுதுள்ளார்.
சிறையில் அடைப்பு
இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் சிரளா கொப்பா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜ்மத்தை கைது செய்தனர். மேலும் அவரை போலீசார் சிவமொக்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.