கொப்பா அருகே வனப்பகுதியில் டிரோன் மூலம் விதைகள் தூவிய வனத்துறையினர்
கொப்பா அருகே வனப்பகுதியில் விதைகளை வனத்துறையினர் டிரோன் மூலம் தூவினர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா எலேமடிலு கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் வனத்துறை அதிகாரி பிரவீன் தலைமையில் டிரோன் மூலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை காட்டுமர விதைகள் தூவப்பட்டது.
இதுபற்றி வனத்துறை அதிகாரி பிரவீன் கூறுகையில், தற்போது மழைக்காலம் என்பதால் டிரோன் மூலம் தூவப்பட்ட காட்டுமர விதைகள் ஊறி மரமாக வளர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களில் வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான மர விதைகள் டிரோன் மூலம் தூவப்பட்டது. கனமழைக்கு மண் சரிவு ஏற்பட்ட இடம் மற்றும் வனப்பகுதியில் குறைந்த மரங்கள் உள்ள இடங்களை கண்டறிந்து விதைகள் விதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டிரோன் மூலம் விதைகளை தூவுவதால் ஊழியர்களுக்கு வேலை மிச்சமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story