தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
இந்தியாவில், தினசரி கொரோனா பாதிப்பு 1 ஆயிரத்து 968 ஆக குறைந்தது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று 3 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 968 ஆக குறைந்தது.
கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 481 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 4 கோடியே 40 லட்சத்து 36 ஆயிரத்து 152 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று இதில் 1,528 குறைந்தது. தற்போது, 34 ஆயிரத்து 598 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு 15 பேர் பலியானார்கள். எண்ணிக்கை மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 716 ஆக அதிகரித்தது. இதுவரை மொத்தம் 218 கோடியே 80 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.