நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரண பொருட்களுடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரண பொருட்களுடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்
x

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.

புதுடெல்லி,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று முன் தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் எற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் மேற்குப்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அவசரகால நிவாரண பொருட்கள், மருந்துகளுடன் இந்திய விமானப்படை விமானம் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றது. விமானம் மூலம் நேபாளம் கொண்டு செல்லப்பட்ட நிவாரண உதவி பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏதுவாக நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.


Next Story