ஐதராபாத்தில் ஐ.பி.எல். சூதாட்டம்; ரூ.60 லட்சம் பறிமுதல் - 4 பேர் கைது


ஐதராபாத்தில் ஐ.பி.எல். சூதாட்டம்; ரூ.60 லட்சம் பறிமுதல் - 4 பேர் கைது
x

ஐதராபாத்-மும்பை போட்டி தொடர்பாக சூதாட்டம் நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின் போது ஒரு வீட்டில் ஐதராபாத்-மும்பை அணிகள் இடையேயான போட்டி தொடர்பாக சூதாட்டம் நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரில் 7 பேர் தப்பியோடிய நிலையில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 60 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story