நாட்டு நலனுக்காக தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் - மம்தா பானர்ஜி


நாட்டு நலனுக்காக தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் - மம்தா பானர்ஜி
x

நாட்டு நலனுக்காக பாஜக தோற்கடிக்கப்பட வேண்டுமென மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் பன்குரா மாவட்டத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா, பாஜக ஒன்றுக்கும் உதவாக கட்சி. நாடு இதுவரை பார்த்ததில் மிகவும் திறமையற்ற கட்சி பாஜக. நாட்டின் நலனுக்காக அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். யாரேனும் உயிரிழப்பார்கள் அப்போதுதான் அந்த உடலை சாப்பிட முடியும் காத்திருக்கும் பிணந்தின்னி கழுகு போன்றது பாஜக' என்றார்.

கட்சியை பிணந்தின்னி கழுகுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜிக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story