திரிபுராவில் மீண்டும் பாஜனதா ஆட்சி அமைக்கிறது


திரிபுராவில் மீண்டும் பாஜனதா ஆட்சி அமைக்கிறது
x

திரிபுரா மாநிலத்தில் 32 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

அகர்தலா,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் 32 தொகுதிகளில் பாஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில் இடதுசாரிகள் 11 இடங்களிலும், காங்கிரஸ், 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன

புதிதாக உருவான திப்ரா மோதா கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றது. திரிபுரா மக்கள் முன்னணி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் பாஜனதா அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கிறது. கடந்த முறையும் திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வந்தது

குறிப்பிடத்தக்கது.

திரிபுரா மாநில தேர்தல் முடிவுகள் : மொத்த தொகுதிகள்: 60 - தேர்தல் நடைபெற்றவை: 60 - முடிவுகள் அறிவிக்கப்பட்டவை: 60

பாஜக 32

சிபிஎம் 11

காங்கிரஸ் 3

ஐபிஎப்டி 1

திப்ரா மோதா 13


Next Story