மைசூரு தசரா விழாவையொட்டி கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு ரூ.8 கோடி வருமானம்; 7 லட்சம் பேர் பயணம்


மைசூரு தசரா விழாவையொட்டி கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு ரூ.8 கோடி வருமானம்; 7 லட்சம் பேர் பயணம்
x
தினத்தந்தி 16 Oct 2022 7:00 PM GMT (Updated: 16 Oct 2022 7:00 PM GMT)

மைசூரு தசரா விழாவையொட்டி கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு ரூ.8 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

மைசூரு;


உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா கடந்த மாதம்(செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி கடந்த 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. தசரா விழாவையொட்டி மைசூருவுக்கு சுற்றுலாபயணிகள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். தசரா விழாவை முன்னிட்டு மைசூருவுக்கு அண்டை மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் தசரா விழாவையொட்டி அரசு பஸ்களில் பயணிகள் பயணித்த விவரம், அதன் வருமானம் குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி.யின் மைசூரு மண்டல அதிகாரிகள் தெரிவித்ததாவது:-

இந்தாண்டு தசரா விழாவை முன்னிட்டு கூடுதலாக 271 பஸ்கள் இயக்கப்பட்டது. மைசூரு மண்டலத்தில் இருந்து 179 பஸ்கள், சாம்ராஜ்நகரில் இருந்து 51, மண்டியாவில் இருந்து 41 பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் மைசூருவில் கிராமம் மற்றும் நகர்ப்பகுதிகளுக்கு 45 பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன்படி தசரா நாட்களான கடந்த மாதம் செப்டம்பர் 28-ந்தேதியில் இருந்து கடந்த 9-ந்தேதி வரை அரசு பஸ்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.7.93 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் கடந்த 10-ந்தேதி ஒரேநாளில் 4.76 கோடி ரூபாய் வருமான வந்துள்ளது.இது கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தசரா விழாவில் வருவாய் ரூ.1.67 கோடி ஆகும்.மேலும் சுற்றுலா பயணிகளை சுற்றி காண்பித்து வந்த அம்பாரி எனும் 2 அடுக்குமாடி சொகுசு பஸ் மூலமாக ரூ.28.21 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story