மராட்டியத்தில் எம்.எல்.ஏ வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு


மராட்டியத்தில் எம்.எல்.ஏ வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு
x

எம்.எல்.ஏ. வீடு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஆர்வலர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தனது சொந்த கிராமத்தில் ஆகஸ்ட் 29-ந் தேதி முதல் செப்டம்பர் 14 வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சென்ற போலீசார், போராட்டதில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அரசு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் போராட்டத்தை கைவிட்டார். எனினும் கடந்த 24-ந் தேதிக்குள் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை எனில் மீண்டும் போராட்டத்தை தொடங்குவேன் என எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் சொந்த கிராமத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

இந்தநிலையில் இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் மராத்தா சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு, ரோட்டில் டயர்களை தீ வைத்து கொளுத்தினர். இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான பிரகாஷ் சோலங்கி வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று எம்.எல்.ஏ. வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் மாஜல்காவ் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ. வீடு தீ கை்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மராத்தா இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு 40 நாள் கெடு விதிப்பது குழந்தை தனமான விளையாட்டு. கிராம பஞ்சாயத்துக்கு தேர்தலில் கூட போட்டியிட இடாத ஒருவர்இன்று ஸ்மார்டான மனிதராகிவிட்டார் என எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கி பேசுவதாக ஆடியோ வெளியானது. இந்த ஆடியோவின் வெளியாகிய நிலையில், எம்.எல்.ஏ வீட்டிற்கும் மராத்தா போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.


Next Story