பிரியங்கா காந்தி ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை? காங்கிரஸ் விளக்கம்
பிரியங்கா ஒரு தொகுதியோடு நின்றுவிடக் கூடாது என்பது முக்கியமானது. அவர் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் பிரியங்கா காந்திக்கு ஏன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதற்கு காங்கிரஸ் பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பிரியங்கா தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடியின் பொய்களை தனி ஆளாக மவுனமாக்கி வருகிறார்.
1985 மார்ச்சில் எஸ்டேட் வரி ஒழிப்பு குறித்து பிரதமர் பரப்பி வந்த வதந்திகளுக்கு அவர் கடும் பதிலடி கொடுத்தார். அதனால்தான் பிரியங்கா ஒரு தொகுதியோடு நின்றுவிடக் கூடாது என்பது முக்கியமானது. அவர் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.' என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story