பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம்; ரத்து செய்ய கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு
சிக்கமகளூருவில் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு கொடுத்தனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்ட ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று முன்தினம் மாவட்ட பொறுப்பு அதிகாரி நிரஞ்சனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சிக்கமகளூரு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நாள்தோறும் விவசாயிகள், ஏழைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை, அலுவலக வளாகத்தில் நிறுத்துகின்றனர்.
இதற்கு அலுவலகம் சார்பில் ரூ.10 முதல் ரூ.20 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபொது மக்களுக்கு மிகவும் பாரமாக உள்ளது. இதனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு பணம் வசூலிப்பதை தடை செய்யவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
அந்த மனுவை பெற்றுகொண்ட மாவட்ட ெபாறுப்பு அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story