ஊழல் இல்லாத இந்தியாவே எனது கொள்கை: பிரதமர் மோடி சுதந்திர தின உரை


தினத்தந்தி 15 Aug 2023 7:11 AM IST (Updated: 15 Aug 2023 10:51 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 10-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.


Live Updates

  • 15 Aug 2023 9:23 AM IST

    அடுத்த முறை இந்த செங்கோட்டையில் நான் கொடியேற்றும் போது நாட்டின் சாதனைகளை கூறுவேன் - பிரதமர் மோடி

    அடுத்த முறை இந்த செங்கோட்டையில் நான் கொடியேற்றும் போது நாட்டின் சாதனைகளை கூறுவேன் என்று பிரத்மர் மோடி, 77-வது சுதந்திர தின உரையில் பேசினார். அடுத்த முறை நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகள் உங்கள் முன் வைக்க உள்ளேன் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

  • 15 Aug 2023 9:00 AM IST

    ஊழல் இல்லாத இந்தியாவே எனது கொள்கை: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

    எதிர்க்கட்சிகளின் அரசியல் கொள்கை என்பது முழுக்க முழுக்க குடும்பத்திற்கானது. குடும்பத்திற்காக மட்டும், குடும்பத்திற்கே அனைத்தும் என்பதே எதிர்க்கட்சிகளின் கொள்கை. நாட்டில் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் எனக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது” என்று பிரதமர் பேசினார்.

  • 15 Aug 2023 8:48 AM IST

    நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் என்ற நிலை தற்போது இல்லை - பிரதமர் மோடி

    நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் என்ற நிலை தற்போது இல்லை. நக்சல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளன. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு மாற்றங்களை கொண்டு வந்து கொடுத்துள்ளேன். இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில், அந்த தடையை நாங்கள் நீக்கியுள்ளோம். 

  • 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய ஓய்வின்றி உழைத்து வருகிறோம்: பிரதமர் மோடி
    15 Aug 2023 8:44 AM IST

    2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய ஓய்வின்றி உழைத்து வருகிறோம்: பிரதமர் மோடி

    இந்தியாவின் எல்லை கிராமங்கள் அல்ல..கிராமங்கள்தான் இந்தியாவின் தொடக்கம். மாநிலங்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அடிக்கல் நாட்டுவது அறிவிப்போடு நின்று விடாமல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் . மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடப்படுகின்றன.



  • 15 Aug 2023 8:34 AM IST

    பாரம்பரிய திறமைகளை கொண்ட மக்களுக்கு உதவுவதற்காக விஸ்வகர்மா யோஜனா திட்டம் - மோடி

    அடிக்கல் நாட்டுவதுடன் நிற்காமல் திட்டங்களை தொடக்கி வைக்கிறோம். இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 200 கோடி கொரோனா தடுப்பூசிகளை நாம் வெற்றிகரமாக செலுத்தியுள்ளோம் . ரூ.15000 கோடி மதிப்பில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும். 200 கோடி கொரோனா தடுப்பூசிகளை நாம் வெற்றிகரமாக செலுத்தியுள்ளோம். நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் என்ற நிலை தற்போது இல்லை.

  • 15 Aug 2023 8:23 AM IST

    கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது - மோடி

  • 15 Aug 2023 8:16 AM IST

    பெரும்பான்மை அரசு அமைந்ததால் சீர்திருத்தங்கள் செய்ய எனக்கு தைரியம் பிறந்தது: பிரதமர் மோடி

    சீர்திருத்தம், செயல்பாடு மாற்றம் இதுவே நம் தாரக மந்திரம். இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க நிலையான அரசு தேவை. இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில், அந்த தடையை நீக்கியுளோம். 2014,2019ல் வலுவான பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் தேர்வு செய்ததால் சீர்திருத்தங்களை செய்ய முடிந்தது. பெரும்பான்மை அரசு அமைந்ததால் சீர்திருத்தங்களை செய்ய எனக்கு தைரியம் பிறந்தது.

  • இந்தியா நவீனத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி
    15 Aug 2023 8:03 AM IST

    இந்தியா நவீனத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

    டிஜிட்டல் இந்தியா திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள உலகமே விரும்புகிறது. இளைஞர்கள்தான் நம் நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தி செல்கின்றனர். தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்து கொள்ளும் திறனை இந்தியா தற்போது பெற்றுள்ளது. இந்தியா நவீனத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு உலக அரங்கிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவாகியுள்ளனர்.

  • ஆயிரம் ஆண்டுகளுக்கு தாக்கம் இருக்கும்: பிரதமர் மோடி
    15 Aug 2023 7:55 AM IST

    ஆயிரம் ஆண்டுகளுக்கு தாக்கம் இருக்கும்: பிரதமர் மோடி

    உலகிற்கே மிகப்பெரிய நம்பிக்கையை இந்தியா விதைத்துள்ளது. தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளின் தாக்கம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். 30 வயதிற்கு குறைவான இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது.

  • 15 Aug 2023 7:49 AM IST

    வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் புகுந்து செல்வ வளங்களை கொள்ளையடித்தனர். தேசத்தை வலிமையுடன் கட்டமைக்கும் பணிகளில் நமது கவனம் உள்ளது - மோடி


Next Story