பிரதமரின் அறிவிப்பு இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும்; அமித்ஷா
ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதை அமித்ஷா வரவேற்றுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசு துறைகளில் அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித்ஷ தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், " புதிய இந்தியாவின் அடிப்படை யாதெனில் அதன் இளைஞர்கள் சக்தி. எனவே, இளைஞர்களை மேம்படுத்த பிரதமர் மோடி அயராது உழைக்கிறார். மத்திய அரசு துறைகளில் 1.5 ஆண்டுகளுக்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு இளைஞர்களுகு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்" எனப்பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story