அதானியை காப்பாற்ற பிரதமர் முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
அதானியை காப்பாற்ற பிரதமர் முயற்சி செய்வதாகவும் உண்மை வெளிவந்தே தீரும் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியும், மத்திய மந்திரிகளும், பா.ஜனதா எம்.பி.க்களும் அதானியை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். உண்மையை மறைக்க முடியாது. அது வெளிவந்தே தீரும்.
அதானியின் உறவினரான வைர வியபாரி ஜதின் மேத்தா, ரூ.7 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். அதுதொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story