கார் மீது தனியார் பஸ் மோதல்
மங்களூரு அருகே கார் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே தொக்கோடு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து 21 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்றது.
அப்போது எந்திர கோளாறு ஏற்பட்டு திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதையடுத்து அந்த பஸ் அதிவேகமாக சென்று எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ் மற்றும் காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர், சிகிச்சைக்காக அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மேலும், இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், கார் மீது மோதியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்து நடைபெற்றபோது அந்த பகுதியில் மக்கள் கூட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.