பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணைய தலைவர் திடீர் ராஜினாமா
பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணைய தலைவர் திடீர் ராஜினாமா செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த விஜய் சம்பலா நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு பா.ஜ.க.வில் அமைப்பு பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனாலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சம்பலா கடந்த 2021-ம் ஆண்டு முதல் பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story