ரேபரேலியில் ராகுல் காந்தி தோல்வியடைவார் : அமித்ஷா


ரேபரேலியில் ராகுல் காந்தி தோல்வியடைவார் : அமித்ஷா
x

ரேபரேலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரிடம் ராகுல் காந்தி தோல்வி அடைவார் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கோடி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரியும் பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா பேசியதாவது: ராகுல் காந்தியை பா.ஜனதாவிற்கு எதிராக 20 முறை சோனியா கொண்டு வந்தார். ஆனால், அனைத்திலும் ராகுல் தோல்வியை சந்தித்தார்.

இன்று அமேதியில் இருந்து ரேபரேலிக்கு ஓடியிருக்கிறார். இங்கிருந்து அந்தத் தொகுதியின் முடிவை நான் கூறுகிறேன். அங்கு, பா.ஜனதா வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வி அடைவார்" என்றார்.


Next Story