பல ஆண்டுகளாக ரெயில்களை சுத்தப்படுத்தும் நடைமுறை தற்போது மாறிவிட்டது... வீடியோ வெளியிட்ட ரெயில்வே


பல ஆண்டுகளாக ரெயில்களை சுத்தப்படுத்தும் நடைமுறை தற்போது மாறிவிட்டது... வீடியோ வெளியிட்ட ரெயில்வே
x

image screengrab for video tweeded by @RailMinIndia

தினத்தந்தி 26 Feb 2023 4:59 PM IST (Updated: 26 Feb 2023 5:07 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்களை சுத்தம் செய்யும் தற்போதைய நடைமுறையை டுவீட்டரில் ரெயில்வே பகிர்ந்துள்ளது.

புதுடெல்லி,

நாம் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் ரெயிலில் பயணம் செய்திருக்கிறோம். மாசு மற்றும் வானிலை காரணமாக ரயிலின் வெளிப்புற பகுதி சில சமயங்களில் அசுத்தமாக இருப்பதை பார்த்திருப்போம். இதனை ரெயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்வார்கள்.

இந்த நிலையில், ரெயில்வே அமைச்சகம் இன்று ட்விட்டரில் ரயில்களை சுத்தம் செய்யும் முறையின் அப்போதைய மற்றும் இப்போதைய வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்கள் எவ்வாறு சுத்தம் செய்யப்பட்டன என்பதை மேல் பகுதி சித்தரிக்கிறது.

அதில் ஒரு நபர், துணி மற்றும் தண்ணீருடன் ரயிலை தனது கைகளால் சுத்தம் செய்வதைக் காணலாம். வீடியோவின் கீழ் பகுதியில் தானியங்கி ரெயில்வே கோச் வாஷிங் ஆலை உள்ளது.

அங்கு ரெயிலின் வெளிப்புறத்தில் உள்ள அழுக்குகளைக் கழுவும் உயரமான ஸ்க்ரப்பர்களின் வழியாக ரயில் செல்வதைக் காணலாம். இந்த நடைமுறை இப்போது பயன்படுத்தப்படுகிறது.

டுவிட்டரில் பகிரப்பட்ட 17 வினாடிகள் கொண்ட இந்த குறுகிய வீடியோ, 3.7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் ஏழாயிரம் லைக்குகளையும் குவித்துள்ளது.


Next Story