ராஜஸ்தான்: சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் தவுசா மாவட்டத்தில் 30 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தவுசா கலெக்டர் வளாகம் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.
இதன்பின் அந்த பஸ் ரெயில்வே தண்டவாளம் மீது கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story