ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..!

ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..!
x

ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..!

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story