காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதி கைது


காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதி கைது
x

கோப்புப்படம்

காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.

ஜம்மு,

காஷ்மீரின் நர்வாலில் கடந்த மாதம் 21-ந்தேதி நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையை தொடர்ந்து ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியை போலீசார் கைது செய்து உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியராக இருந்து பயங்கரவாதியாக மாறிய ஆரிப், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உத்தரவுப்படி காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளார்.

குறிப்பாக நர்வாலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு, கடந்த மே மாதம் வைஷ்ணவி தேவி கோவில் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் சாஸ்திரி நகரில் நடந்த குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஆரிப்பின் தொடர்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட ஆரிப்பிடம் இருந்து வாசனை திரவிய பாட்டில் வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த வெடிகுண்டு காஷ்மீரில் சிக்குவது இதுவே முதல்முறை என போலீசார் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் தொடர் விசாரணை நடந்து வருகின்றன.


Next Story