காஷ்மீரில் நடந்த இரண்டாவது கையெறி குண்டு தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் காயம்


காஷ்மீரில் நடந்த இரண்டாவது கையெறி குண்டு தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் காயம்
x

Image Courtacy: ANI

சுதந்திர தினமான இன்று காஷ்மீரில் நடந்த இரண்டாவது கையெறி குண்டு தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர்,

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளான இன்று ஜம்மு காஷ்மீரின் புட்காம் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் நடந்த இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவர் மற்றும் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தனர்.

இரண்டு தாக்குதல்களிலும் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். புட்காம் மாவட்டத்தில் நடந்த முதல் தாக்குதலில், கோபால்போரா சதூரா பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர், இதில் கரண் குமார் சிங் என்ற நபர் காயமடைந்தார். இதனையடுத்து காயமடைந்த அவர் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஸ்ரீநகரின் படாமலூ பகுதியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர், இதன் காரணமாக அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

ஸ்ரீநகரின் நௌஹட்டாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன, இதில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சர்ஃபராஸ் அகமது இன்று உயிரிழந்தார்.


Next Story