பெங்களூருவில் 61-வது தேசிய தடகள விளையாட்டு போட்டி; மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்
பெங்களூருவில் 61-வது தேசிய தடகள விளையாட்டு போட்டி வருகிற ௧௫-ந் தேதி தொடங்கி நடக்க உள்ளதாக மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
61-வது தேசிய திறந்தவெளி தடகள சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை கர்நாடக தடகள சங்கம் நடத்துகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டிகள் கர்நாடகத்தில் நடைபெறுவது பெருமை அளிப்பதாக உள்ளது. இந்த தடகள போட்டியில் 47 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று பரிசுகளை வழங்குகிறார். இந்த போட்டியில் நாட்டின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story