காவிரியில் 5,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை?


காவிரியில் 5,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை?
x

தமிழகத்திற்கு 5,000 கன அடி காவிரி நீர் திறக்க ஒழுங்காற்றுகுழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி, காவிரியில் இருந்து கடந்த 4 மாதங்காளாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீர் அளவானது, ஜூன் மாதம் 9 டிஎம்சி, ஆகஸ்ட் மாதம் 45 டிஎம்சி, செப்டம்பர் மாதம் 36 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும்.

ஆனால் கடந்த 4 மாதங்களாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை கொடுக்கவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 டிஎம்சி அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது. இம்மாதம் மட்டும் அதிகபட்சமாக 25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது.

இந்நிலையில் தான் இன்று காவிரி ஒழுங்காற்றுகுழு அலோசனை நடத்துகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் காணொளி வாயிலாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு தமிழகத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில்,

ஆகஸ்டில் தரவேண்டிய 45.95 டிம்சியை நீரில் பெருமளவு கர்நாடகா கொடுக்கவில்லை எனவும் செப்டம்பர் தரவேண்டிய 36 டிஎம்சி நீரையும் முழுமையாக தந்ததால் தான் குறுவை சாகுபடி செய்ய முடியும் என வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து 1,900 கனாடி நீரை கர்நாடக அரசு திறந்து விடும் நிலையில் கூடுதலாக 3,100 கன அடி நீர் திறந்து விட பரிந்துரை செய்துள்ளதாகவும், கர்நாடக அணைகளில் இருந்து 5,000 கன அடி நீரை அம்மாநில அரசு திறக்க உத்தரவிடுமாறு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாளைய காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் காவிரி நீர் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் காணொளியில் பங்கேற்றனர்.


Next Story