ஒரே நேரத்தில் 13 ஆயிரம் வழக்குகள் ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் அதிரடியாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நடவடிக்கையாக ஒரே நேரத்தில் 13 ஆயிரத்து 147 பழைய வழக்குகள் அதிரடியாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் சிராக் பன்னுசிங் நேற்று முன்தினம் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இந்த வழக்குகள் 2014-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டவை. 1987-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அடங்கும். இவற்றுக்கு டைரி எண் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்யுமாறு மனுதாரர்களிடம் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், பல ஆண்டுகள் ஆனபோதிலும் அவர்கள் குறைபாடுகளை சரிசெய்யவில்லை. எனவே, விதிமுறைப்படி, அந்த வழக்குகள் ரத்துசெய்யப்பட்டு இருப்பதாக சிராக் பன்னுசிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story