உ.பி.யில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆசிரியர் - சி.சி.டி.வி.யில் பதிவான அதிர்ச்சி சம்பவம்
போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான ஆசிரியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவம் வகுப்பறையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த ஆசிரியரிடம் இருந்து தப்பித்த மாணவி, தனது குடும்பத்தினருடன் காவல் நிலையத்திற்கு சென்றுச் சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான ஆசிரியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story